பாவம் போக்க இறைவனுக்கு உயிர்பலி ஏன்? ஏதுக்கு?

இறைவன் அன்பின் வடிவம் உயிர்களிடத்தில் கருணையானவன்னுதான் இந்த உலகத்து மதங்களனைத்தும் போதிக்கின்றன.அப்படியிருக்கையில்  கிருத்துவத்தில் ஏசுகிருஸ்த்து இந்த உலகத்தார் செய்த பாவங்களனைத்தையும் போக்க  தன் உயிரை கொடுத்து சிலுவை சுமந்து தன் ரத்தத்தை கொடுத்து இந்த உலகத்தார் அனைவரது பாவங்களையும் போக்கினார். அதே போல் இந்து மதத்திலும் ஆடு மாடு போன்ற வாயில்லா ஐந்தறிவு ஜீவன்களை காளியம்மன் மாரியம்மன் போன்ற காவல் தெய்வங்களுக்கு ஏன் பலி கொடுக்கிறார்கள்.இறைவன் அனைத்து உயிர்களிடத்திலும் அன்பும் கருணையும் கொண்டவனென்றால் ஏன் இந்த முரண்பாடு.

இந்து மதம் தோன்றிய இதே நாட்டில்தான் புத்தமதமும் ஜைனமதமும் தோன்றியது.ஆனால் இந்த புத்தமும் ஜைன மதமும் சிறு எறும்பைக்கூட உயிர்பலி கேட்பதில்லையே.ஏன் இந்த முரண்பாடு.இறைவன் கருணைவடிவானவன் என்று போதிக்கும் மதங்கள் இப்படி உயிர்பலிகொடுத்தால் தான் இறைவன் நம் பாவங்களை போக்குவார் என்று போதிக்கிறதா.இது கடவுள் கருணையுள்ளவன் என்ற இறைகோட்பாடுக்கு முரணாக எதிராகயில்லையா.ஏன் இந்த முரண்பாடு. 

இதற்க்கு நன்கு கற்றறிந்த மாதகுருமார்கள்தான் விளக்கம் சொல்ல வேண்டும்.

மீண்டும் பேசலாம் பழகலாம்.

நன்றி🙏                        

Aathi

Comments

Popular posts from this blog

2022-23 ஆம் வருடத்திற்கான வருமான வரி தாக்கல் செய்தல்

வருமான மற்றும் சரக்கு சேவை வரி ஆலோசனை

ஆதி மனிதன் தோன்றியதும் இந்து,கிருஸ்தவ மத நம்பிக்கையும் ,உயிரியல் படியெடுப்பு (குளோனிங்)ம்