செயற்க்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் (AI - Artificial Inteligence)

மறைந்த நடிகர் விவேக்  ஒரு தமிழ் சினிமாவில் ஒரு விபத்தில் அவர் உடம்பில் அளவுக்கதிகமான மின்சாரம் பாய்ந்து அதன் விளைவால் அவருக்கு சக மனிதர்களில் மனஎண்ணவோட்டங்களையேல்லாம் அறிந்துகொள்ளும் ஆற்றல் வந்ததினால் அவர் தினமும் பல பிரச்சனைகளில் சிக்கிக்கொள்வார்.நடிகர் விவேக் சினிமாவில் நகைச்சுவைக்காக செய்துபோல்  மனிதனின் எண்ணவோட்டங்களை அறிந்து ஒருவர் உண்மையில் அவர் மனதில் என்ன நினைக்கிறார் என்பதை அறிந்து அதற்கேற்றால் போல் தீர்வு சொல்லும்  செயற்க்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை அதாவது ஆங்கிலத்தில் சுருக்கமாக AI( Artificial Inteligence)  அமெரிக்காவின் டெக்ஸாஸ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளார்களாம். மனித மனத்தின் எண்ணவோட்டங்களை கண்டறிய புறப்பட்டால் வருங்காலத்தில் இதனால் பல சிக்கல்களும் பிரச்சனைகளும் தான் வருமே ஓழிய இந்த தொழில்நுட்பத்தால் பயனேதும் இருக்கப்போவதில்லை.மனிதனைப்படைத்த இறைவன் மனிதனுக்கு தேவையான எல்லா ஆற்றலையும் வைத்து படைத்தவன்.மனித மனத்தை கண்டறியும் ஆற்றலைமட்டும் மட்டும் அவனுக்கு வைத்து படைக்கவில்லை.ஏனென்றால் மனிதன் அடுத்தவர் மனதில் என்ன நினைக்கிறார் என்று தெரிந்துகொண்டால் மனிதனால் இந்த உலகில்  நிம்மதியாக வாழமுடியாது என்று என்னிடத்தில மனிதனுக்கு அந்த ஆற்றலைவைத்து படைக்கவில்லை.இறைவனுக்கு தெரியும் இந்த ஆற்றலினால் மனிதனுக்கு குழப்பமும் பிரச்சனையும் வருமென்று.அதனால் அந்த ஆற்றலுடன் மனிதனை படைக்கவில்லை.இந்த AI தொழில்நுட்பம் நடைமுறைக்கு வந்தால்  ஒவ்வொருவரும்  சுயமாக சிந்திக்க பயப்படுவார்கள்.ஏனென்றால்  நாம் மனதில் என்ன நினைக்கிறோமென்பதை இந்த செயற்க்கை நுண்ணறிவு கருவி காட்டிக்கொடுத்துவிடும்.இந்த தொழில்நுட்பத்தை கண்டுபிடித்த உலக அறிஞ்சர்களே இந்த தொழில்நுட்பத்தால் வருங்காலத்தில் உலகத்திறகு ஏற்ப்படபோகும்  ஆபத்தைக்குறித்து எச்சரிக்கவும் செய்கிறார்கள்.முக்கியமாக இந்த செயற்க்கை நுண்ணறிவு தொழில் நுட்பத்தில் வருங்காலத்தில் என்பது சதவித வேலைவாய்ப்பு பறிபோகுமென  எச்சரிக்கிறார்கள்.ஏனென்றல் இப்பொழுது மனிதன் செய்யும் வேலையனைத்தையும் இந்த செயற்க்கை நுண்ணறிவு கருவியே செய்துவிடுமாம்.ஆகையால் மனிதனுக்கு வருங்காலங்களில் வேலையில்லாமல் போகுமென இதை கண்டுபிடித்தவர்களே எச்சரிக்கிறார்கள்.ஆகையால், இன்றைய விஞ்ஞான தொழில் நுட்பத்தால் ஆற்றலும் அழிவுமுள்ளது.
  
நாம் ஆற்றலுள்ள  தொழில் நுட்பத்தை மட்டும் வரவேற்ப்போம்.

நன்றி 🙏

Athi.

வாங்க நாம் இன்னமும் பேசலாம் பழகலாம்.


Comments

Popular posts from this blog

2022-23 ஆம் வருடத்திற்கான வருமான வரி தாக்கல் செய்தல்

வருமான மற்றும் சரக்கு சேவை வரி ஆலோசனை

ஆதி மனிதன் தோன்றியதும் இந்து,கிருஸ்தவ மத நம்பிக்கையும் ,உயிரியல் படியெடுப்பு (குளோனிங்)ம்