Posts

கோடை வெயிலும் அதன் கொடுமையும்

வருட வருடம் வெயிலின் தாக்கம் அதிகரித்துக்கொண்டே போகிறது .இந்த வருடம் வெயிலில் தாக்கம் மிகக்கடுமையாகவும் மிகக்கொடுமையாகவுமிருக்கிறது.இந்த கடும் வெயிலுக்கு உடம்பெல்லாம் ஒரே அரிப்பாகயிருக்கிறது.தினம் இருமுறை குளித்தாலும் உடலரிப்பு தாங்கமுடியவில்லை .அந்தளவுக்கு சூரியனுடைய புற ஊதாக்கதிர்களின் தாக்கம் கடுமையாகயுள்ளது.இன்னமும் அக்கினிநட்சத்திரம் ஆரம்பிக்கவில்லை.மே மாதம் இதைவிட வெயிலின் கடுமை மிக அதிகமாகயிருக்கும்.வெயில் போய்வரவே ரெம்ப பயமாகயிருக்கிறது.இந்த வெயிலின் கொடுமைக்கு குழந்தைகளையும் முதியவர்களையும் நினைத்தால் ரெம்ப பயமாகயிருக்கிறது . இறைக்கையை மனிதன் மதிக்கவில்லையென்றால் அதன் விளைவு இப்படித்தினிருக்கும். நிறைய மரம் செடிகொடிகளை நட்டு வைத்து இப்போதே வளர்த்தால் தான் வரும்காலங்களில் மனிதனால் இந்த மாதிரியான கடும் வெயிலிருந்து தன்னை காத்துக்கொள்ளமுடியும் . மரம்வளர்ப்போம் இயற்க்கையின் கடுமையிலிருந்து நம்மை காத்துக்கொள்வோம்.நன்றி 🙏

வருமான மற்றும் சரக்கு சேவை வரி ஆலோசனை

அன்பு நண்பர்களே, இந்த ப்ளாக்கின் மூலம் வருமான மற்றும் சரக்கு சேவை வரி சம்பந்தமான எனக்கு தெரிந்ததை உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாமென்றிருக்கிறேன்.ஆகையால் மேற்க்கூறிய வருமான மற்றும் சரக்கு சேவை வரி சம்பந்தமாக உங்களுக்கு எழும் சந்தேகங்களை கேளுங்கள் எனக்கு தெரிந்த விளக்கம் மற்றும் விபரங்களை கூறி உங்கள் சந்தேகங்களை போக்க முயல்கிறேன். மேலும் நீங்கள் வணிகம் செய்பராகயிருந்தால்.உங்கள் வணிக விரிவாக்கத்திற்கான வங்க கடன் பெறுவது விசயான சந்தேகம் ஏதாவதுயிருந்தால்  கேளுங்கள்.அந்த விசயத்தில் வங்கிக்கடன் பெறுவது  எப்படி என எனக்கு தெரிந்த விபரங்களை சொல்லுகிறேன்.நன்றி 🙏 தொடர்பிற்க்கு எனது கைபேசி எண் : 88254 82068

2022-23 ஆம் வருடத்திற்கான வருமான வரி தாக்கல் செய்தல்

வணக்கம் நண்பர்களே.கடந்து முடிந்த 2022-23 ஆம் ஆண்டிற்க்கான வருமான வரி தாக்கல் செய்வது விசயமாக.வருமான வரித்துறை கணனியில் 2022-23 ஆம் வருடத்திற்கு வருமான வரி தாக்கல் செய்வதற்கு வசதியாக I T R form ( Income Tax Return forms) எனப்படும் வருமான வரி தாக்கல் செய்ய வேண்டிய பாரத்தை இந்த வருடம் ஏப்ரல் மாதத்திலயே முன்கூட்டியே கணனியில் வெளியிட்டுள்ளது. ஆகையால் நண்பர்கள் 2022-23  வருடத்திற்க்கான உங்கள் வருமான வரியை இது உங்கள் வணிக வருமான மாகயிருந்தாலும் சரி,இல்லை வேறு மாதச்சம்பளம் வாங்குபவராகயிருந்தாலும் சரி இல்லை வேறு ஏதாவது வழியில் சம்பாதித்த வருமானத்திற்கானதாகயிருந்தாலும் சரி இப்பொழுதிலிருந்தே நீங்கள் உங்கள் வருமான வரியை தாக்கல் செய்யலாம். வருமான வரி தாக்கல் செய்வதற்கான கடைசி கெடு நாள் ( ஜுலை 31 ஆம் தேதி) முடிந்து அபரதத்தொகை.ரூ 5000/ முதல் ரூ10000/= வரை செலவு செய்து தாக்கல் செய்வதை தவிர்க்க உங்கள வருமான வரி தாக்கலை இப்பொழுது தொடங்கிவிடுங்கள். 2022-23 ஆம் வருடத்திற்க்கான உங்கள் வருமான வரியை நியாயமான கட்டணத்தில் தாக்கல் செய்ய  88254 82068 என்ற என் கைபேசிக்கு என்னை தொடர்பு கொள்ளுங்கள். மேலும் நீங்கள்

ஆதி மனிதன் தோன்றியதும் இந்து,கிருஸ்தவ மத நம்பிக்கையும் ,உயிரியல் படியெடுப்பு (குளோனிங்)ம்

சிலகாலத்திற்க்கு முன்பு நாமெல்லோரும் குளோனிங் ( Cloning)  என்ற வார்த்தையை படித்திருப்போம் இல்லை மற்றவர்கள் பேச கேட்டிருப்போம்.அதாவது ஆங்கிலத்தில் அது குளோனிங்.தமிழில் அதறக்கான சரியான அர்த்தம் உயிரியல் படியெடுப்பு அதாவது  ஒரு உயிரை அது மனிதனோ வேறு ஏதாவது ஆடு மாடு போன்ற எந்த உயிரினமாகயிருந்தாலும் இயற்க்கையாக கலவி செய்து உயிரை உருவாக்காமல் ஒரு மனிதனையோ வேறு ஏதாவது உயிரினத்தையோ அதன் குணாதிசயங்கள் மாறாமல் அப்படியே அதே போன்ற வேறொரு மனிதனை அல்லது உயிரினத்தை இயற்க்கைக்கு புறம்பாக கல்வி செய்யாமல் உருவாக்குதல் அதாவது ஒரு உயிரை அதன் குணாதிசயங்கள் மாறாமல் ஜெராக்ஸ் எடுத்தல் தான் குளோனிங் என்ற விஞ்ஞான வளர்ச்சி.ஆனால் நான் என்ன சொல்ல வாருகிறேனென்றால்  கிருஸ்தவ மாத நம்பிக்கையின்படி ஆதி மனிதனான ஆதாம் ஏவாள் தோன்றியதும் இந்து சனாதான தர்மப்படி ( மனு தர்மம்) மனிதன் தோன்றியதும் இந்த குளோனிங் முறையில்தான்ங்கிறேன்.கிருஸ்தவ நம்பிக்கைப்படி கடவுள் ஆதாமை முதலில் படைத்தாரென்றும் ஏவாளை  ஆதாமினுடைய விலா எலும்பிலிருந்தும் படைத்தார் என்று கிருஸ்தவ வேதகாமத்திலிருக்கிறது.அதே போல் இந்து மனு தர்மம் என்ன சொல்கிறதென்று பார்த

செயற்க்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் (AI - Artificial Inteligence)

மறைந்த நடிகர் விவேக்  ஒரு தமிழ் சினிமாவில் ஒரு விபத்தில் அவர் உடம்பில் அளவுக்கதிகமான மின்சாரம் பாய்ந்து அதன் விளைவால் அவருக்கு சக மனிதர்களில் மனஎண்ணவோட்டங்களையேல்லாம் அறிந்துகொள்ளும் ஆற்றல் வந்ததினால் அவர் தினமும் பல பிரச்சனைகளில் சிக்கிக்கொள்வார்.நடிகர் விவேக் சினிமாவில் நகைச்சுவைக்காக செய்துபோல்  மனிதனின் எண்ணவோட்டங்களை அறிந்து ஒருவர் உண்மையில் அவர் மனதில் என்ன நினைக்கிறார் என்பதை அறிந்து அதற்கேற்றால் போல் தீர்வு சொல்லும்  செயற்க்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை அதாவது ஆங்கிலத்தில் சுருக்கமாக AI( Artificial Inteligence)  அமெரிக்காவின் டெக்ஸாஸ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளார்களாம். மனித மனத்தின் எண்ணவோட்டங்களை கண்டறிய புறப்பட்டால் வருங்காலத்தில் இதனால் பல சிக்கல்களும் பிரச்சனைகளும் தான் வருமே ஓழிய இந்த தொழில்நுட்பத்தால் பயனேதும் இருக்கப்போவதில்லை.மனிதனைப்படைத்த இறைவன் மனிதனுக்கு தேவையான எல்லா ஆற்றலையும் வைத்து படைத்தவன்.மனித மனத்தை கண்டறியும் ஆற்றலைமட்டும் மட்டும் அவனுக்கு வைத்து படைக்கவில்லை.ஏனென்றால் மனிதன் அடுத்தவர் மனதில் என்ன நினைக்கிறார் என்று தெரிந்துகொண்டால் மனித

பாவம் போக்க இறைவனுக்கு உயிர்பலி ஏன்? ஏதுக்கு?

இறைவன் அன்பின் வடிவம் உயிர்களிடத்தில் கருணையானவன்னுதான் இந்த உலகத்து மதங்களனைத்தும் போதிக்கின்றன.அப்படியிருக்கையில்  கிருத்துவத்தில் ஏசுகிருஸ்த்து இந்த உலகத்தார் செய்த பாவங்களனைத்தையும் போக்க  தன் உயிரை கொடுத்து சிலுவை சுமந்து தன் ரத்தத்தை கொடுத்து இந்த உலகத்தார் அனைவரது பாவங்களையும் போக்கினார். அதே போல் இந்து மதத்திலும் ஆடு மாடு போன்ற வாயில்லா ஐந்தறிவு ஜீவன்களை காளியம்மன் மாரியம்மன் போன்ற காவல் தெய்வங்களுக்கு ஏன் பலி கொடுக்கிறார்கள்.இறைவன் அனைத்து உயிர்களிடத்திலும் அன்பும் கருணையும் கொண்டவனென்றால் ஏன் இந்த முரண்பாடு. இந்து மதம் தோன்றிய இதே நாட்டில்தான் புத்தமதமும் ஜைனமதமும் தோன்றியது.ஆனால் இந்த புத்தமும் ஜைன மதமும் சிறு எறும்பைக்கூட உயிர்பலி கேட்பதில்லையே.ஏன் இந்த முரண்பாடு.இறைவன் கருணைவடிவானவன் என்று போதிக்கும் மதங்கள் இப்படி உயிர்பலிகொடுத்தால் தான் இறைவன் நம் பாவங்களை போக்குவார் என்று போதிக்கிறதா.இது கடவுள் கருணையுள்ளவன் என்ற இறைகோட்பாடுக்கு முரணாக எதிராகயில்லையா.ஏன் இந்த முரண்பாடு.  இதற்க்கு நன்கு கற்றறிந்த மாதகுருமார்கள்தான் விளக்கம் சொல்ல வேண்டும். மீண்டும் பேசலாம் பழகலாம். நன்றி